ETV Bharat / bharat

புதிய வேளாண் சட்டம் மூலம் விவசாயிகள் தன்னிறைவு பெறுவார்கள் - ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை - மூன்று புதிய வேளாண் சட்டங்கள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை தன்னிறைவு பெற செய்யும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Ravi Shankar Prasad
Ravi Shankar Prasad
author img

By

Published : Sep 28, 2020, 9:22 PM IST

அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து தற்போது அது சட்டமாக மாறியுள்ளது.

இந்நிலையில் இந்தச் சட்டம் குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'புதிய சட்டங்கள் மூலம் இனி நாட்டின் அனைத்து விவசாயிகளும் தன்னிறைவு பெற்று அவர்கள் பயிர் கொள்முதல் செய்யும் திறன் மேம்படும். உதாரணமாக கடந்த ஆட்சி காலத்தில் 2013-14 காலக்கட்டத்தில் பாசிப்பருப்பை அன்றைய அரசு கொள்முதல் செய்யவில்லை. அதேவேளை, 2019-20 காலக்கட்டத்தில், சுமார் 1.66 லட்சம் மெட்ரிக் டன் பாசிப்பருப்பை தற்போதைய அரசு கொள்முதல் செய்துள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று சட்டங்களுக்கும் எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றன. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த சிரோன்மணி அகாலிதளம் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கரோனா வந்தால் மம்தாவை ஓடிப்போய் கட்டிப்பிடிப்பேன்' - பாஜக தேசிய செயலாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.