கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழக தகவல் மையத்தில் விவசாய நிலத்தில் ட்ரோனைப் பயன்படுத்தி உரங்கள், பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்காக சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் நீரில் கரைக்கப்பட்ட உரங்களை குறுகிய நேரத்தில் நீண்ட தூரம் வரை விவசாய நிலத்தில் தெளிக்க முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகின்றன.
விரைவில் விவசாயிகளுக்கு ட்ரோனை பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகளை தெளிக்க ஏற்பாடு செய்யப்படும் என பஜாயண்ணூர் வேளாண் அதிகாரி ஜோசப் ஜான் தெரட்டில் கூறினார்.
இதையும் படிங்க: குழந்தை சுர்ஜித் மீண்டு வரவேண்டும்' - நடிகர் விவேக் கண்ணீர்..!