ராஜஸ்தான் மாநிலம் ரகுநாத்புர கிராமத்தைச் சேர்ந்தவர் நேட்ரம் நாத் என்ற விவசாயி. இவர், கடந்த புதன்கிழமையன்று பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து இவரது சகோதரர் கூறுகையில், மருதரா கிராம வாங்கியில் எனது அண்ணனுக்கு மூன்று லட்சம் ரூபாய் விவசாயக்கடன் உள்ளது. மழையின்மையால் அறுவடை செய்ய இயலாமல் இருந்த என் அண்ணனுக்கு, மருதரா கிராம வாங்கியில் இருந்து கடனை திருப்பிக்கேட்டு தொடர்ந்து நோட்டீஸ் வந்தது. இதனால் மனஉளைச்சலுடன் காணப்பட்ட அவர், புதன்கிழமையன்று பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மருதரா கிராம வாங்கியின் மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின் வங்கி மேலாளர் ஜக்ரூப் சிங் கூறுகையில், நேட்ரம் நாத் எங்கள் வங்கியின் தொடர் வாடிக்கையாளர். கடன் தொடர்பான எந்த ஒரு நோட்டீசும் அவருக்கு அனுப்வில்லை என்றார்.