ஒடிசா மாநிலத்தில் மே 3ஆம் தேதி ஃபோனி புயல் தாக்கியதில் தற்போது வரை 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல லட்சம் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
ஒடிசாவில் பூரி, குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில் புயல் கடந்தும், இன்னும் கூட அப்பகுதியில் சுமார் ஒரு கோடிக்கு மேலான மக்களுக்கு உணவு, குடிநீர், மின் இணைப்பு என அடிப்படை வசதி கிடைக்காமலும், மேலும் உதவிக்கு தொடர்புக்கொள்ள எந்த ஒரு தொலைத்தொடர்பு சாதனம் இன்றியும் மக்கள் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்பட்டுவருகின்றனர்.
அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் தலைநகரம் புவனேஷ்வரில், பாதி வீடுகளுக்கு மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது, இருந்தாலும் கூட ஆனால் பெருவாரியான மக்கள் தற்போது வரை இருளில் வாழ்ந்து வரும் சூழ்நிலை உள்ளதால், அதன் விரக்தியால் மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.
அரசு தங்களின் பணிகளில் துரிதமாக செயல்படவேண்டும், மேலும் புயலில் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய பூரி, குர்தா, கட்டாக் ஆகிய பகுதிகளில் இன்னும் கூட களத்தில் வேலை பார்ப்பதற்கு ஆட்களை பணியில் ஈடுபடுத்த, அரசு வழிசெய்ய வேண்டும் என்று அம்மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் அம்மாநில அரசிற்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.