ETV Bharat / bharat

இடுக்கியில் 3 பேருக்குக் கரோனா; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

author img

By

Published : May 31, 2020, 11:29 PM IST

திருவனந்தபுரம்: சுகாதார ஊழியர்கள் அதிகம் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மூன்று பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

family-of-3-tested covid-19-positive-in-keralas-munnar-the district is on-high-alert
இடுக்கியில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 வயது ஆண் உட்பட அவரின் பெற்றோருக்கு நடத்திய பரிசோதனையில் மூவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் சிறிது நாட்களுக்கு முன்புதான் சென்னை சென்று திரும்பியுள்ளனர். இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர்கள் மூவரும் பரிசோதனை மேற்கொண்டபோது கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் இடுக்கி, வயநாடு பகுதிகளில் கரோனா எண்ணிக்கை குறைவாகத்தான் இதுவரை உள்ளது. இருப்பினும், மூணாறில் சுகாதார ஊழியர்கள் அதிகம் பேர், மிகவும் நெருக்கமான வீடுகளில் அருகாமையிலேயே வசித்து வருகின்றனர்.

மேலும் அங்கு வசித்த சென்னை சென்று திரும்பிய மூன்று பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டதால், தொற்று பரவும் அபாயம் உள்ளதால், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் 137 பேர் மூணாறிலும்; 78 பேர் தேவிகுளத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மத்திய அரசு ஏழை மக்களிடம் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.