ETV Bharat / bharat

கேரள முதலமைச்சரின் நம்பகமான IAS அதிகாரி எம்.சிவசங்கர் வீழ்ந்த கதை! - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரத்தை பூர்விகமாகக் கொண்ட IAS அதிகாரியான எம்.சிவசங்கர், கல்வியில் மிகவும் சிறந்து விளங்கியவர். அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். பாலக்காடு NSS பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சிவசங்கர் நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமா முடித்து, இந்திய ரிசர்வ் வங்கியில் அலுவலராக சேர்ந்தார்.

M Shivasankar
M Shivasankar
author img

By

Published : Oct 30, 2020, 6:34 PM IST

திருவனந்தபுரம்: 2016ஆம் ஆண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, பினராயி விஜயன் கேரள முதலமைச்சராக பதவியேற்றபோது, எம்.சிவசங்கர் IAS, முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் பல மூத்த IAS அதிகாரிகளை தவிர்த்து, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.டி துறையின் செயலாளராகவும் சிவசங்கர் நியமிக்கப்பட்டார்,.

முதலமைச்சரின் நம்பகமான அலுவலர்களாக இருந்த தலைமைச் செயலாளர் நளினி நெட்டோ, டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஜேக்கப் தாமஸ் மற்றும் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்ட ஏராளமானவர்களில், சிவசங்கர் மிக முக்கியமானவர்.

சிவசங்கர் முதலமைச்சருக்கும் மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் இடையிலான பாலமாக இருந்தார். மேலும் முதலமைச்சரின் அனைத்து அதிகாரபூர்வ பயணங்களிலும் முதலமைச்சருடன் வருவார். முதலமைச்சரின் கனவுத் திட்டங்களாக இருந்த நான்கு திட்டங்களை திட்டமிடுவதற்கான முக்கிய பங்கை அவரிடம் ஒப்படைத்த பின்னர் இன்னும் பலமிக்கவரானார்.

இவை அனைத்திற்கும் இடையில், Transgrid, K- Fon, E Mobility மற்றும் மதுபானம் தொடர்பான பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முதலமைச்சரின் அலுவலகம் சிக்கலில் இருந்தது.

இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டுகளில் சிவசங்கரின் பெயர் எங்கும் அடிபடவில்லை. இந்த ஒப்பந்தங்களுக்கான கோப்புகள் முதலமைச்சரின் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினாலும், சிவசங்கர் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை.

ஸ்ப்ரிங்க்லர் நிறுவன ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு சிவசங்கர் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். தான் தன்னிச்சையாக முடிவெடுத்து ஸ்ப்ரிங்க்லருக்கு ஒப்பந்தத்தை வழங்கியதாக ஊடகங்களுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

கோவிட் நோயாளிகளின் சுகாதாரத் தரவை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பிய சம்பவம், ஆளும்கட்சி கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான CPIயின் கோபத்தை தூண்டியது. அமைச்சரவை அளவிலான கூட்டத்தில் கூட விவாதிக்கப்படாமல் தரவை அனுப்புவது நெறிமுறை மற்றும் நடைமுறைகளை மீறுவதாக CPI குற்றம் சாட்டியது.

இது நடந்து முடிந்தவுடன், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக பொருள்கள் செல்லும் வழியாக நடந்த தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை தலையிட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சிவசங்கர் தொலைபேசியில் பேசிய உரையாடல் வெளிவந்ததால், விசாரணை வளையத்துக்குள் அவரை உட்படுத்தியது.

முதன்மைச் செயலாளர் சிவசங்கரை ஆரம்பத்தில் முதலமைச்சர் ஆதரித்த போதிலும், தங்கக் கடத்தல் வழக்கில் அவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜூலை 17 அன்று அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர், சிவசங்கரை மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து விசாரித்தன. அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிந்ததால், சிவசங்கர் உயர்நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தார், ஆனால் பிணை கிடைக்கவில்லை.

இதையடுத்து, தான் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நெஞ்சுவலி என்ற போலிக்காரணத்திற்காக முன்னாள் ஐடி செயலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், அவர் எதிர்பார்த்த பிணை நடவடிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தபோது, தான் கைது செய்யப்பட மாட்டோம் என்ற அவரது நம்பிக்கை பொய்த்துப்போனது.

சிவசங்கரின் முன்பிணை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்த சில நிமிடங்களில், அமலாக்கத்துறை (ED) அலுவலர்கள் திருவனந்தபுரத்தின் வஞ்சியூரில் உள்ள திரிவேணி ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்று அங்கு முதுகுவலிக்கு சிகிச்சை பெற்று வந்த அவரை கைது செய்தனர்.

திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட IAS அதிகாரியான எம்.சிவசங்கர், கல்வியில் மிகவும் சிறந்து விளங்கியவர். அவர் SSLC தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். பாலக்காடு NSS பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சிவசங்கர் நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமா முடித்து, இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக சேர்ந்தார்.

பின்னர் அவர் மாநில அரசில் துணை கலெக்டர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1995ம் ஆண்டில் அவர் IAS தேர்வில் வெற்றி பெற்றார். மலப்புரம் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை செயலாளர், மாநில சுற்றுலா இயக்குநர், பொதுக் கல்வி இயக்குநர், விளையாட்டுத் துறை செயலாளர் மற்றும் மாநில மின்சார வாரியத் தலைவர் என அவர் தனது வாழ்க்கையில் பல முக்கியமான பதவிகளைக் கையாண்டுள்ளார்.

கேரளாவின் பல்வேறு அரசுகளுடன் இணைந்து பணியாற்றிய சிவசங்கர் மெதுவாக அரசியல் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அரசியல் வேறுபாடுகளை கடந்து, கேரள LDF மற்றும் UDF அரசாங்கங்களுக்கு சிவசங்கர் நம்பகமான அதிகாரியாக இருந்தார்.

அந்த அரசியல் தொடர்பு தான், தகுதிவாய்ந்த பல மூத்த IAS அலுவலர்கள் இருந்தபோதும், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக அவரை ஆக்கியது. பாலக்காடு NSS கல்லூரியில் படித்த நாள்களில் இருந்த அவரது முந்தைய SFI தொடர்புகளும் அதற்கு உதவியது.

இறுதியாக, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரை ED அலுவலர்கள் கைது செய்துள்ளனர். சிவசங்கரின் வீழ்ச்சி.. தற்காலிகமானது அல்ல, நிரந்தரமானது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.