ETV Bharat / bharat

டெல்லியில் உலாவும் போலி இ - பாஸ் - ஐ.டி. சட்டம் வழக்குப் பதிவு

டெல்லி: லாக்டவுன் காலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய இ - பாஸ்களை போலியாக தயாரித்த கும்பலை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

E Pass
E Pass
author img

By

Published : May 25, 2020, 7:06 PM IST

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் முறையான அனுமதியுடன் பாஸ் பெற்றுதான் பயணம் மேற்கொள்ள முடியும் என்றக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வழங்கப்படும் இந்த பாஸ்களை டெல்லியைச் சேர்ந்த ஒரு கும்பல் போலியாக தயாரித்து விற்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை துணை ஆணையர் அலுவலக இணையத்தை ஹேக் செய்து அதன் மூலம் இந்த கும்பல் போலி பாஸ்களை கடந்த ஒருவாரமாக தயாரித்து வந்ததை டெல்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து பிடிபட்ட கும்பல் மீது ஐ.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. மேலும், இது போன்ற செயல்களில் வேறு கும்பல்கள் செயல்படுகின்றனவா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

இதையும் படிங்க: இந்தியாவை உளவு பார்க்கவந்த பாகிஸ்தான் ’புறா’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.