பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் மகளிருக்கு உதவுத் தொகை வழங்குவதற்காக ஜனனி சுரக்ஷா யோஜனா என்ற திட்டம் மத்திய அரசு சார்பாக பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பிகார் மாநிலம் முக்சாஃபர்நகரை பகுதியில் வசித்து வரும் 65 வயது மூதாட்டி ஒருவருக்கு, கடந்த 14 மாதங்களில் 8 பெண் குழந்தைகள் பெற்றதாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடு குறித்து அம்மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சிங் பேசுகையில், '' இதனைப் பற்றி விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்னும் இரண்டு நாள்களில் அறிக்கை சமர்பிக்க உள்ளார்கள். அந்த அறிக்கையில் உண்மை தெரிய வந்தபின், நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அடுத்த மாதத்திற்குள் தீர்ப்பு