ETV Bharat / bharat

மகாராஷ்டிரா அரசியலைத் தீர்மானிக்கும் இரு சந்திப்புகள்!

டெல்லி: மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உள் துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடையேயான சந்திப்பும் மகாராஷ்டிரா அரசியலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maharashtra
author img

By

Published : Nov 4, 2019, 3:20 PM IST

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும் சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ். கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது. சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 29 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் முதலமைச்சர் பதவி குறித்த விவகாரத்தில் அக்கட்சிக்கும் சிவசேனாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது.

இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷாவை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் சந்தித்து பேசவுள்ளார். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கைவிடுக்க பட்னாவிஸ் டெல்லி செல்கிறார் எனக் கூறப்பட்டாலும், ஆட்சி அமைப்பது குறித்துதான் சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடையேயான சந்திப்பும் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. பாஜக-சிவசேனா கூட்டணிதான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கவுள்ளதாக சரத்பவாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரவிரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஆவாரா 'தாக்கரே'?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.