மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி நடக்கவுள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் தற்போது பாஜக ஆட்சி நடத்திவருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள தேவேந்திர பட்னாவிஸ் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவை அவர் இன்று தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்தபோது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, உடனிருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரமாண்ட சாலை பரப்புரையில் தேவேந்திர பட்னாவிஸ், நிதின் கட்கரி உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆஷிஷ் தேஷ்முக்கை களமிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.