கரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 25,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,70,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது மனித இனத்திற்கு பெரிய சவாலாக உள்ளது. முதல் இரண்டு வாரங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களிடம் அறிகுறிகள் தென்படுவதில்லை. அறிகுறிகள் தென்படும்போது நோய் பலருக்கு பரவிவிடுகிறது.
பாதிக்கப்பட்டவர்களிடம் அறிகுறிகள் தென்பட தொடங்குவதற்கு முன்பே, அவர்கள் நோயை பெரிய அளவில் பரப்பிவிடுவதாக இயற்கை மருத்துவம் என்ற ஆராய்ச்சி இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. 44 விழுக்காட்டினர் பாதிப்படைவதற்கு இதுவே காரணமாகும். சீனாவில் பாதிக்கப்பட்ட 79 விழுக்காட்டினருக்கும், சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட 48 விழுக்காட்டினருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை.
2002ஆம் ஆண்டு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வைத்து சார்ஸ் நோயை கண்டறிந்தனர் என பலர் கூறுகின்றனர். பெருமளவு மக்களிடம் அறிகுறிகள் தென்பட்ட பிறகே அது பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நேரெதிராக அறிகுறிகள் தென்படாமலேயே கரோனா வைரஸ் நோய் பரவியது. டெல்லியில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 186 பேரிடம் அறிகுறிகள் தென்படவில்லை. மகாராஷ்டிராவில் 65 விழுக்காட்டினருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 75 விழுக்காட்டினருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை.
தனிமைப்படுத்தப்பட்டு 14 நாள்களுக்கு பிறகே சிலருக்கு அறிகுறிகள் தென்படத் தொடங்குகிறது. வைரஸ் நோயின் கணிக்க முடியாத தன்மையை கருத்தில் கொண்டு பார்த்தால், பெரிய அளவில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது தீர்வாக பார்க்கப்படுகிறது. அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் மூலம் கரோனா வைரஸ் நோய் கட்டுக்குள் வந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 43 லட்சம் அமெரிக்கர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகள் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளைக் காட்டிலும் இது அதிகம். இருப்பினும், அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது.
கரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட மோசமான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டால், பெருந்தொற்றை கட்டுப்படுத்த இந்தியா இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது. இந்தியாவில் 40 லட்சம் பேர் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இது சொற்ப எண்ணிக்கையாகும்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இரண்டாவதாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் கண்டறியும் கருவிகளை இந்தியா வாங்கியது. பெரும் காலதாமதத்திற்கு பிறகு, சீனாவிடமிருந்து 5 லட்சம் ரேபிட் பரிசோதனை கருவிகளை இந்தியா வாங்கியது. இதனை தயாரிப்பதற்கு இந்திய நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த நிலையில், நம்மிடம் போதுமான அளவு நோய் கண்டறியும் கருவிகள் இல்லாதது பின்னடைவு. எனவே, அதுவரை மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதே ஒரே தீர்வாகும்.
இதையும் படிங்க: ஊரடங்கின் வெற்றியை நாடு எதிர்கொள்ளும் விதம்தான் தீர்மானிக்கும்: மன்மோகன் சிங்