ETV Bharat / bharat

புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் - கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர்

author img

By

Published : Sep 15, 2020, 2:07 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ சாலையில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் நேற்று (செப் 14) கண்டுபிடித்துள்ளனர்.

Explosives detected, defused in Jammu & Kashmir's Baramulla

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பட்டன் பகுதியில் உள்ள ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் ராணுவத்தின் சாலையில் (ஆர்ஓபி) தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் சாதனத்தை பாதுகாப்புப் படையினர் நேற்று (செப் 14) கண்டுபிடித்தனர்.

பின்னர் வெடிகுண்டு அகற்றும் குழு வரவழைக்கப்பட்டு பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பே அனைத்து வெடிபொருட்களும் அகற்றப்பட்டன. பாதுகாப்புப் படையினரையும், விஐபி-க்களின் குதிரைப் படையினரையும் குறிவைத்து இந்த நெடுஞ்சாலைகளில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படைகள், விஐபி-க்கள் கடந்து செல்வதைப் பாதுகாப்பதற்காக ராணுவப் படைகள், பாதுகாப்புப் படையினர் இந்த ராணுவ சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ராணுவ சாலையில் மின்னணு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மோப்ப நாய்களுடன் சேர்ந்து, புதைக்கப்பட்டிருக்கும் எந்த வெடிபொருட்களும் உடனடியாகக் கண்டுபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.