ETV Bharat / bharat

இருமாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு உணர்த்துவது என்ன?

டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜக அபார வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Congress - BJP
author img

By

Published : Oct 21, 2019, 11:30 PM IST

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் இது குறித்தான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற முடிவையே அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ளன.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா

நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 243 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக - சிவசேனா கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் வெற்றிபெறும் என டைம்ஸ் நவ் சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 166 - 194 தொகுதிகள், காங்கிரஸ் கூட்டணி 72 - 90 தொகுதிகள் கைப்பற்றும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா

நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக 75 தொகுதிகளையும் காங்கிரஸ் 10 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக 71 தொகுதிகளிலும் காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என டைம்ஸ் நவ் சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக 52 தொகுதிகள், காங்கிரஸ் 19 தொகுதிகள் வெற்றுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் காங்கிரஸ் இரண்டு மாநிலங்களிலும் படுதோல்வி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

Exit Poll Results Maharashtra and Haryana 2019 Assembly Elections

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.