பழங்குடியின மக்கள் வாழ்வை முன்னேற்றும் நோக்கில், பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக மலைவாழ் மக்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் இன்று தொடங்கியது. இந்தக் கண்காட்சி வரும் 16ஆம் தேதிவரை நடைபெறஉள்ளது.
கேரளா, அசாம், அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 25 மாநிலங்களிலுள்ள மலைவாழ் மக்கள் தயாரித்த வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், மூலிகைத் தைலங்கள், வாசனைத் திரவங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இதற்காக 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் நாராயணன் உட்பட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வனத்துறையில் முதல் 'திருநங்கை' : பணியில் சேர்ந்தார் ’தீப்தி’