ETV Bharat / bharat

'ஆட்சி நடத்தும் அருகதையை யோகி அரசு இழந்துவிட்டது!' - ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை

டெல்லி: ஹத்ராஸ் கும்பல் வழக்கில் நடுநிலை தவறிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசைக் கலைக்க கோரி குடியரசுத் தலைவரிடம் ஆசாத் சமாஜ் தலைவர் சந்திரசேகர ஆசாத் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஆட்சி நடத்தும் அருகதையை உ.பி., யோகி அரசு இழந்துவிட்டது - சந்திரசேகர ஆசாத்

author img

By

Published : Oct 6, 2020, 2:43 PM IST

Updated : Oct 6, 2020, 2:50 PM IST

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அவர் கூறுகையில், "ஆட்சியதிகாரத்தை நடுநிலையோடு வழிநடத்திடவும், வஞ்சிக்கப்படும் மக்களின் துயர் துடைக்கவும் இயலாத உத்தரப் பிரதேச அரசு ஆளும் அருகதையை இழந்துவிட்டது.

அதனை ஹத்ராஸ் இளம்பெண்ணின் கும்பல் பாலியல் வன்கொடூர வழக்கும், அரசினது மெத்தனமும் அம்பலப்படுத்திவிட்டது. இந்தக் கொடூர சம்பவத்தின் தொடக்கத்திலிருந்தே உ.பி. அரசு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை.

சாதியை, மதத்தைப் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்பவர் ஆட்சியாளர் அல்ல. அந்த வகையில் செயல்பட முதலமைச்சர் யோகிக்கு எந்த உரிமையையும் அரசியல் அமைப்பு வழங்கவில்லை.

அப்படி, அவற்றைப் பார்த்துதான் ஒருவர் முடிவெடுப்பார் எனில் அவருக்கு அதிகாரத்தில் அமர தகுதியில்லை. எனவே, ஹத்ராஸ் கும்பல் வழக்கில் நடுநிலை தவறிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசைக் கலைக்க கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.

மேலும், ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அடங்கிய குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தி உத்தரவிட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சாதி வெறியர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பூல்கிராஹி கிராமத்தில் வாழ்ந்துவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கடந்த 4ஆம் தேதி சென்று சந்தித்த எங்கள் மீது ​​144 தடை உத்தரவை மீறியதாக உ.பி. காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளது.

ஆனால், அன்றைய மாலையில் இதே 144 தடையை மீறி உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு முன்னால் ஆயிரக்கணக்கில் வலதுசாரி குழுக்களான பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ்., கர்ணி சேனா, உள்ளூர் பாஜக ஆதரவாளர்கள் கூடி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அச்சுறுத்தும் வகையில் முழக்கமிட்டனரே அவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

கும்பல் பாலியல் வன்படுகொலை நடத்தியவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்.பி. கூட்டம் கூட்டுகிறார். அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறுகிறது. அதன் மீது உ.பி. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

அவர்கள் அரசின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தும் நாடாக இந்த நாடு மாறிவிட்டது.

இப்படியே தொடர்ந்தால், நாடு எந்த வழியில் செல்லும் என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் பகிரங்கமாக தனது எதிர்ப்பை இதுவரை ஏன் பதிவுசெய்யவில்லை.

அவரை நான்கு முறை உத்தரப் பிரதேச முதலமைச்சராக்கிய மக்கள்தான் இன்று வதைக்கப்பட்டுவருகிறார்கள். இப்போது அவருக்கு அவர்களின் வலியைக் காண நேரமில்லையா?

ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் வலியை அவரால் உணர முடிந்திருந்தால், களத்தில் அவர் இறங்கியிருந்தால் அநீதிக்கெதிரான இந்தப் போரில் நாம் இன்னும் வலுவாக எதிர்த்துப் போராடியிருக்கலாம். ஆனால், அது நடைபெறவில்லை.

உண்மையில், பட்டியலினத்தவர்களுக்கும் மாயாவதிக்கும் இடையிலான உறவு முடிந்துவிட்டது. ஏழை பட்டியலினத்தவரைப் பற்றி அவர் பேசாததற்கு இதுவே காரணம்" என்று தெரிவித்தார்.

Last Updated : Oct 6, 2020, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.