புதுச்சேரியில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் 32 இடங்கள் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடங்கள் என்று மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்தார்.
அதனடிப்படையில், நாளை 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை, அந்த 32 இடங்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு, மக்கள் யாரும் செல்லாமல் இருக்க, காவல் துறையினர் இரும்பு வேலியில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று (ஆக. 30) முத்தியால் பேட்டை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், காவல் துறை அமைத்திருந்த தடுப்பு வேலியை அகற்றினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்பட்டது.
முன்னதாக, மக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்காமல் ஊரடங்கை அமல்படுத்தியதாக குற்றஞ்சாட்டி அரசை கண்டித்து நேற்று முன்தினம் (ஆக.28) ஆட்சியர் அலுவகத்தில் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய இன நாய்கள் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளியுங்கள்- பிரதமர் மோடி