ஆண்டி மைக்ரோபியல் எதிர்ப்பு என்பது ஒரு நோய்க்கிருமி நுண்ணுயிரியின் திறன். இது மருந்துகளின் விளைவுகளுக்கு எதிர்ப்பை உருவாக்குகிறது. இதனை நிர்வகிக்காவிட்டால் 2050ஆம் ஆண்டில், சுமார் 10 மில்லியன் மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி இணைந்து ஆண்டிபயாடிக் எதிர்ப்பு குறித்த இரண்டு நாள் சர்வதேச வெபினார் நடத்தப்பட்டது.
அந்த வெபினாரில், கரோனா வைரஸ் உலகம் முழுவதையும் எவ்வாறு திணறடிக்கிறது மற்றும் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பை நோக்கிய சுகாதார வசதிகளின் கவனத்தை கணிசமாக பாதித்தது குறித்து சுகாதார வல்லுநர்கள் பேசினர்.
சானிடைசர்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தாவிட்டால் 2050ஆம் ஆண்டை எட்டும்போது, 10 லட்சம் மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும் நிலை ஏற்படும். கரோனா வைரஸால் அதிகரித்துள்ள சானிடைசர்கள் மற்றும் ஆண்டி மைக்ரோபியல் சோப்களின் பயன்பாடு, சூழலை இன்னும் ஆபத்தாக்கும் என தெரிவித்துள்ளனர்.
மாற்று சிகிச்சை முறைகளை ஆராய்வதற்கான அவசர தேவை இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர். பாக்டீரியோபேஜ்கள், எண்டோலிசின்கள், நானோ துகள்கள், புரோபயாடிக்குகள் மற்றும் ஆண்டி மைக்ரோபியல் பெப்டைடுகள் போன்ற வழக்கமான மற்றும் மாற்று சிகிச்சை முறைகளின் முக்கியத்துவம் தேவை என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'எல்லையில் எதிரிகளுக்குப் பதிலடி கொடுக்க தயார்' - ஐஏஎஃப் விமானிகள்
!