மத்தியப் பிரதேசத்தில் ஆளும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழக்கும் நோக்கில், அக்கட்சி அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜக தன்வசம் இழுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் நான்கு அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மத்தியில் ஆளும் பாஜக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்கும் நோக்கில் ஆளும்கட்சி உறுப்பினர்களை விலைக்குவாங்கி புழக்கடை வழியில் ஆட்சிப்பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. குதிரை பேரத்துடன் ஆட்சி அமைப்பதை தனது வழக்கமான யுக்தியாக பாஜக கொண்டுள்ளது.
கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் குறித்த கேள்விக்கு கருத்து தெரிவித்த ராவ், பல்வேறு மூத்தத் தலைவர்களின் பெயர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் புதியத் தலைவரை கட்சி மேலிடம் நியமிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் கர்நாடகாவுக்கான நிதி ஒதுக்கீடை மத்திய அரசு ஒரு லட்சம் கோடி அளவுக்கு குறைக்கத் திட்டமிட்டுள்ளது எனவும், இந்நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க: ரஜினி மீது வழக்குப்பதிவு? - 9ஆம் தேதி தீர்ப்பு!