மத்தியப் பிரதேசத்தில், கரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று (மே.10) ஒரே நாளில் 157 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, போபால் உஜ்ஜைன், ஜபல்பூர் பகுதிகள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், ஊரடங்கால் சிக்கித் தவித்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, பாஜக முன்னாள் எம்எல்ஏ ஜிதேந்திர தாகா உணவு பொட்டலங்களை வழங்கி வந்தார்.
அவருக்கு திடீரென்று உடல்நிலை மோசமானதால், கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு பகுதி மக்களை நேரில் சந்தித்தது மட்டுமின்றி, பல காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமும் கலந்துரையாடியுள்ளார்.
தற்போது, சிராயு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் ஜிதேந்திர தாகா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடும்பத்தினருக்கும் கரோனா அறிகுறிகள் இருந்ததால், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஜிதேந்திர வசித்துவந்த வீடு உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 மாநிலங்களில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்