கொல்கத்தா: 2000 முதல் 2011ஆம் ஆண்டுவரை மேற்குவங்க முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. 76 வயதான இவர் வயது முதிர்வு காரணமாகவும், நுரையீரல் அடைப்பு நோயாலும் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்டுவந்தார்.
இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், ஐந்து பேர் கொண்ட மருத்துவர் குழு முன்னாள் முதலமைச்சரை கண்காணித்துவருகின்றனர். அவர் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
சில நாள்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துவந்தாலும், அவர் தற்போதுவரை கவலைக்கிடமாகவே உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தன்கர் ஆகியோர் அவரைச் சந்தித்து, விரைவில் நலம்பெறுமாறு கூறினர்.
இதையும் படிங்க: பேரணிகள் மூலம் மக்களை கொல்லும் பாஜக - மம்தா பானர்ஜி