கோலார் (கர்நாடகம்): மறுவாழ்வு மையத்தில் ஆதரவற்றோருக்கு உணவளிக்க நிர்வாகம் அல்லல்படுவதாக செய்தி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊரடங்கால் மொத்த நாடும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அந்தராகங்கே மறுவாழ்வு மையத்தில் உண்ண உணவில்லாமலும், அங்கிருப்பவர்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்ய நன்கொடைகள் இல்லாமலும் வாடி வருவதால், அரசின் உதவியை பெற காத்திருக்கின்றனர் அறக்கட்டளை உரிமையாளர்கள்.
இந்தச் சூழலில் சரியான நன்கொடையாளர்கள் இல்லாமல் திணறிவரும் இதன் காப்பாளர்கள், அங்கு தங்கியிருக்கும் ஆதரவற்றோர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் போன்ற தேவைகளுக்கு நிதி இல்லாமல் வாடி வருவது வேதனையளிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
சாதாரண நாட்களில், இதுபோன்று செயல்பட்டு வரும் அறக்கட்டளைகளுக்கு உதவும் மக்கள், தற்போது எந்த இசைவும் காட்டாமல் இருப்பது வேதனையளிக்கும் செயலாகும். எனவே, மக்களும், அரசும் தங்களால் இயன்ற உதவியை அளிக்கும்படி அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.