சிபிஎஸ்சி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்துமுடிந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை ஆசிரியர்களின் வீடுகளிலேயே நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. இந்நிலையில் ஆசிரியர்களின் விடுகளிலேயே விடைத்தாள்கள் வழங்கப்பட்டு, திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசுகையில், '' 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஆசிரியர்களின் வீடுகளிலேயே நடக்கவுள்ளது. இதற்காக 3 ஆயிரம் சிபிஎஸ்சி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு விடைத்தாள்களைக் கொடுக்கும் பணிகளை மேற்கொள்ளும்.
இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் விடைத்தாள்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் 50 நாள்களில் முடிவடையும். கரோனா வைரஸ் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி தாமதமாக தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் 29 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டியுள்ளன. அதனால் தேர்வுகள் நடந்து அந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தப்ப்பட்டு பின்பு மொத்தமாகதான் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்வுகள் ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு மருந்து? முழுவீச்சில் களமிறங்கியுள்ள ஐசிஎம்ஆர் - பிபிஐஎல்