ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ரத்து செய்தது. அப்போது முதல் காஷ்மீர் பகுதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
காஷ்மீருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும் என்று சர்வதே அளவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஆஸ்திரியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் காஷ்மீருக்கு சென்று அங்குள்ள நிலைமை குறித்த ஆய்வு செய்தனர். அப்போது காஷ்மீர் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் வெளிநாட்டு பிரதிநிதகள் கலைந்துரையாடல் நடத்தினர்.
இந்நிலையில், காஷ்மீர் குறித்து ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் வர்ஜீனி ஹென்ரிக்சன் கூறுகையில், "காஷ்மீர் நிலைமையை ஆய்வு செய்வதற்கும் அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடுவதற்கும் இந்த பயணம் உதவியது.
காஷ்மீரில் நிலைமையை சீராக்க இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவகிறது என்பதை நாங்கள் இந்தப் பயணத்தி்ல் உணர்ந்துகொண்டோம். இருப்பினும் சில கட்டுப்பாடுகள், குறிப்பாக மொபைல் மற்றும் இணைய சேவை, காஷ்மீர் தலைவர்களின் வீட்டுக்காவல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்னும் அங்கு தொடர்கிறது.
அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும் என்ற இந்தியாவின் கவலையை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் மெல்ல நீக்கப்படவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சி தலைவர்கள் இல்லாத அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா!