திருவனந்தபுரம் (கேரளா): கர்நாடகா மாநிலம் கூர்க் மாவட்டத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று (ஏப்ரல் 27) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தின் உடனடி தலையீட்டைக் கோரி, கூர்க் கிராமங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் அவல நிலையை ஈடிவி பாரத் செய்தி ஊடகம் முதலில் செய்தி வெளியிட்டது.
அதன் விளைவாக, அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களை மீட்டு வீட்டிற்கு அழைத்து வரவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று நடந்த கோவிட்-19 குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
'PM Cares'-க்கு எதிரான மனு தள்ளுபடி!
கேரளாவின் வயநாடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் கர்நாடகாவின் தொலைதூர கிராமங்களில், குறிப்பாக கூர்க்கில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் பருவகால விவசாய வேலை முடிந்த பிறகும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அங்கேயே தவிக்கிறார்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இவர்கள், அனைவரும் உணவுக்கும், மருந்துக்கும் கூட அல்லப்படுகிறார்கள் என்பதை அறிகிறேன். அங்கு சிக்கியிருக்கும் அனைவரையும் மீட்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் சிறு சிறு குழுக்களாக இங்கு அழைத்து வரப்படுவர் என்று உறுதியளித்துள்ளார்.
தாய் வீட்டிலிருந்து வரமாட்டேன்-மனைவி...வீட்டிற்கு அழைத்து வர காவல் துறையை நாடிய கணவர்!
ஏப்ரல் 26ஆம் தேதி, கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் துயரங்களை ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி வெளியானவுடன், அரசாங்கம் தலையிட்டு தொழிலாளர்களை மீட்டு கேரளாவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.