சத்தீஸ்கர் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனத் பகுதியில் ராம்சரண் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பழங்குடி இனத்தவரான இவர், மனைவியின் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு ஊருக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதியில் மூன்றாண்டுகளாகத் தங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். தனது மனைவி குழந்தைகளுடன் தார்பாயில் டென்ட் அமைத்து கூரையற்று கடினமான சூழலில் வாழ்ந்துவந்த ராம் சரணுக்குத் தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது.
இவரின் மோசமான நிலை குறித்து ஈடிவி பாரத் நிறுவனம் செய்தி வெளியிடவே, இந்த விஷயம் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் கௌஷல் டெண்டுல்கர் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. விவரத்தை உடனடியாக விசாரித்த அவர், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ராம் சரணுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
வாழ்நாளில் தனக்கென ஒரு வீடு கிடைக்கும் என நம்பவில்லை என்று நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ள ராம் சரண்; சட்டமன்ற உறுப்பினர் கௌஷல், ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இதையும் பருங்க: தஞ்சை அருகே மக்களுக்காக சேவையாற்றும் 20 ரூபாய் டாக்டர்!