ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம்: சிக்கலை தீர்ப்பது மட்டுமே அரசுக்கு நன்மதிப்பு

தன்னை ஒரேவொரு தொலைபேசி அழைப்பில் அணுக முடியும் என்று பிரதமரே விவசாய சங்கங்களிடம் அறிவித்திருக்கிறார். அரசுக்கு தாங்கள் அதிக விசுவாசிகள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அதிகார வர்க்கம், குடியரசு நாள் டிராக்டர் ஊர்வலத்தின்போது சொல்ல முடியாத இன்னல்களை விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறது.

author img

By

Published : Feb 7, 2021, 2:56 PM IST

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

தேசத்தின் தலைநகரின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தைச் சிறப்புமொழியில் வர்ணிக்க வேண்டுமென்றால், அது ஒரு இருத்தலுக்கான யுத்தம் எனலாம். ஆத்ம நிர்பர் பாரத், அதாவது சுயச்சார்புள்ள இந்தியா என்னும் இலக்கை அடைய வேண்டும் என்னும் பேரில் நடுவண் அரசு கொண்டுவந்த சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்பது அவர்களின் கருத்து.

அவர்கள் இதுவரை 11 முறை பேச்சு வார்த்தைகளில் கலந்துகொண்டனர். அதேநேரம். கோவிட் தொற்றுப்பயம் பூதாகரமாக தோன்றிய போதிலும், அவர்கள் மீது தீவிரவாதிகள், காலிஸ்தான்வாதிகள் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போதிலும், நடுநடுங்க வைக்கும் குளிரைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றனர். ஆனாலும் பேச்சு வார்த்தைகளினால் அவர்களுக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை.

தன்னை ஒரேவொரு தொலைபேசி அழைப்பில் அணுக முடியும் என்று பிரதமரே விவசாய சங்கங்களிடம் அறிவித்திருக்கிறார். அரசுக்கு தாங்கள் அதிக விசுவாசிகள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அதிகார வர்க்கம், குடியரசு நாள் டிராக்டர் ஊர்வலத்தின்போது சொல்ல முடியாத இன்னல்களை விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறது.

போராட்டக்காரர்களைச் சுற்றிலும் தடுப்புகளை, அகழிகளை, நெடிய சுவர்களை, முறுக்கிக் கட்டப்பட்ட மின்கம்பிகளை, ஆணித் துண்டுகளைப் போட்டு அவர்களை முற்றுகையிட்டு அதிகாரிகள் தங்களின் கீழ்த்தரமான கெட்ட நோக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அடக்குமுறை ஓர் உச்சத்தைத் தொட்டது, இணையத் தொடர்பை நிறுத்தியபோது; ரயில் வண்டிகளைத் திசைத் திருப்பி விட்டபோது; போராட்ட வீரர்களுக்குள் பிளவுண்டாக்கும் நாடகம் நடந்தபோது; அவர்கள் மீது பொய் வழக்குகள் சோடிக்கப் பட்டபோது; நீர் மற்றும் சுகாதார வசதிகளை நிறுத்தியபோது.

’இந்திய மக்களாகிய நாம்’ நமக்குக் கொடுத்துக் கொண்ட அரசியல் சட்ட அமைப்பு அமைதிப் போராட்டத்திற்கான உரிமையை நமக்குக் கொடுத்திருக்கிறது என்பதை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லையா?

விவசாயிகளுக்கு நன்மை செய்யும் என்று பாசாங்கானதோர் உறுதிமொழியைக் கொடுத்து அரசு கொண்டுவந்த சட்டங்களை விவசாயிகள் நிராகரிக்கின்றபோது, அரசு அந்தச் சட்டங்களை ஒன்றரை வருடம் கிடப்பில் போடப் போவதாக முன்மொழிந்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு விவசாயிகள் ஒரு சட்டவடிவம் கோருகிறார்கள். அரசோ எழுத்துப்பூர்வமாக மட்டுமே ஓர் உறுதிமொழியைத் தர தயாராக இருக்கிறது.

இந்திய வரலாற்றில் இதுபோன்ற விவசாயிகள் போராட்டத்திற்கு இரண்டு முன்மாதிரிகள் இருக்கின்றன. பாக்டி சம்பல் ஜட்டா (உங்கள் தலைப்பாகையைக் காத்துக் கொள்ளுங்கள், ஓ ஜட்டா) என்ற இயக்கம் 1907-ல் சுதந்திர வீரனும், தியாகியுமான பகத்சிங்கின் உறவினரான சர்தார் அஜித் சிங்கின் தலைமையில் நடந்தது.

அந்த இயக்கத்தின் தீவிர போராட்டத்தின் விளைவாக, அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் தான் கொண்டுவந்த மூன்று கறுப்புச் சட்டங்களை விலக்கிக் கொண்டு பணிந்துபோனது. அதன் பின்னர், சுமார் எட்டுத் தசாப்தங்கள் கழித்து, மகேந்தர் சிங் டிக்கைட் என்பவரின் தலைமையில் நடந்த போட் கிளப் போராட்டம் அப்போதைய ராஜீவ் காந்தி அரசை முட்டிப்போட வைத்தது.

தற்காலத்துப் போராட்டத்தில், ஒவ்வொரு நாளும் ஒரு விவசாயி கருணையற்ற தட்பவெப்ப நிலையால் மரணித்துக் கொண்டிருக்கும் போதுகூட அசைந்து கொடுக்காமல் போராடுகிறார்கள் விவசாயிகள். அவர்களின் கோரிக்கைகளில் நேர்மை இருக்கிறது. அடக்கு முறைகளினால் சற்றும் தளராத அவர்கள் சட்டங்களை திரும்பப் பெறுமாறு அரசை நிர்ப்பந்திக்கிறார்கள்.

2004-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி டாக்டர் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதாக வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் சர்ச்சையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது அரசு. விவசாயிகளின் வருமானத்தை இந்தச் சட்டங்கள் இரட்டிப்பாக்கும் என்று வேறு சொல்கிறது. வேளாண்மை என்பது மாநில அதிகாரத்திற்குட்பட்ட சமாச்சாரம்.

ஆனால் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு, நடுவண் அரசு மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு விவசாயிகளின் சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அதிகாரிகள் வரைந்திருந்த சட்ட வரைவுகளுக்கு அரசு சம்மதம் தந்துவிட்டது.

ஆனால் குளுகுளு ஏசி அறைகளின் சுகத்தில் திளைக்கும் அதிகாரிகளுக்குக் கொடுமையான கள நிஜங்கள் தெரிவதில்லை. விவசாயிகளின் ஆட்சேபங்களையும் எதிர்ப்புகளையும் நன்றாக அறிந்தபின்பும் சட்டங்களைத் திரும்பப் பெற அரசு மறுத்துக் கொண்டே இருக்கிறது. ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக சட்டங்களை அரசு ஏன் முழுவதுமாக குழிதோண்டிப் புதைத்து விடக்கூடாது? எல்லோருக்கும் இணக்கமான புதிய சட்டங்களை ஏன் அது கொண்டுவரக் கூடாது?

தேசத்தில் எதிர்க்கட்சி முகாம் எவ்வளவு பலகீனமாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது விவசாயிகளின் போராட்டம். என். ஜி. ரங்கா போன்ற விவசாயிகளின் நலனுக்காக உழைத்த தலைவர்கள் இப்போது இல்லை. அதுதான் விவசாயி இனத்தின் துரதிர்ஷ்டத்தின் மையம். இந்த அநிச்சயங்களின் பின்னணியில், நம்மைக் குடைந்துக் கொண்டே இருக்கும் கேள்வி இதுதான்: என்று முடியும் இந்தச் சோதனை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.