சட்டீஸ்கர் மாநிலம் தண்டிவாடா மாவட்ட எல்லையின் வனப்பகுதிகளில் பதுங்கியுள்ள நக்சலைட்டுகள் பெரும் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களை சுற்றிவளைக்க 400ம் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் தனித்தனி குழுக்ககளாக பிரித்து அனுப்பப்பட்டனர்.
டி.ஆர்.ஜி. பாதுகாப்புப் படை வீரர்கள் வனப்பகுதியில் சூழ்ந்தபோது, நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாத நக்சல்கள், வனப்பகுதிகளில் பதுங்கினர்.
இதையடுத்து அப்பகுதியில் நடத்திய சோதனையில், நக்சலைட் ஒருவரின் உடல் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்துப் பேசிய பாதுகாப்புப் படை அலுவலர், துப்பாக்கிச்சூடு முடிவடைந்ததையடுத்து அந்த இடத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது உயிரிழந்த நக்சலைட் ஒருவரின் உடலும், அவரிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் டி.ஆர்.ஜி. வீரர் ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கைலாஷ் நேதம் என்பவர் மாரடைப்பு குறித்து கூறியிருந்தார். தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அவர் உயிரிழந்தது மாரடைப்பால் தான் என்பது பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: நக்சல் பாதித்த கிராம மாணவர்களுடன் கமல்ஹாசன் மெட்ரோவில் பயணம்!