தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டம் டைரூ பகுதியில் பிரிவினைவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்தத் திடீர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தேடுதல் நடவடிக்கையின்போது பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் பிரிவினைவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் முழு விவரங்களைப் பாதுகாப்புப் படையினர் சேகரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : கரோனா தடுப்பிற்காக பெல் நிறுவனத்துடன் கை கோர்த்த எய்ம்ஸ் நிறுவனம்