பல நாடுகளுக்கு விமான போக்குவரத்தை நடத்தும் துபாய் நிறுவனம், எமிரேட். இந்நிறுவனத்தில் அரசின் பங்குகள் அதிகம். ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் விமான போக்குவரத்து கடுமையாகப் பாதித்துள்ளது.
இதுதொடர்பாக எமிரேட்டை சேர்ந்த ஊழியர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'துபாயை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எமிரேட் விமான நிறுவனம், தேவைக்கு அதிகமாகவே ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து சீனாவில் எந்தப் பகுதிக்கும் விமான சேவை செய்யவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த நோயின் தாக்கம் சீனாவைத் தவிர, இதர நாடுகளில் பரவினால் நிலைமை இன்னும் மோசமாகும். குறிப்பாக, ஹாங் காங், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், தவிர்க்க முடியாத பொருளாதார பின்னடைவு ஏற்படும்' என்றார்.
ஆகையால், எமிரேட் விமான நிறுவனம், நேரடி பணியில் தேவைப்படாத ஊழியர்களை ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது. நிலைமைச் சீரடையும் வரையில் இந்த நிலை தொடரும்' எனவும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தேவை இல்லாத பொருட்களை பயனுள்ளதாக மாற்றும் ஓவிய சகோதரர்கள்!