புதுச்சேரியில் இன்று (ஜூன் 17) ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 246ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
அதில், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, மக்களவை உறுப்பினர்கள் கோகுல கிருஷ்ணன், வைத்திலிங்கம், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், அரசு செயலர் பிரசாந்த் குமார் பாண்டா சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறை, புதுச்சேரி பிரதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது, சென்னையில் இருந்து இ-பாஸ் பெற்று வருபவர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.