ETV Bharat / bharat

புதுச்சேரியில் தேர்தல் பணிகள் தீவிரம்...! - தேர்தல் பணிகள்

புதுச்சேரி: மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

author img

By

Published : Apr 17, 2019, 12:53 PM IST

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 970 வாக்குச்சாவடிகளும், 2471 வாக்கு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய 1209 இயந்திரம் வி வி பேட்களும் தயார் நிலையில் உள்ளன.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு பிரத்யேகமாக 2 வாக்கு இயந்திரங்கள் வாக்குச் சாவடியில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் 29 ஆயிரத்து 320 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 27 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 3700 காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் புதுச்சேரியில் உள்ள 222 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 25 மிகவும் பதற்றமனான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

புதுச்சேரியில் முதல்முறையாக இந்தத் தேர்தலில் ஏழு வாக்குச்சாவடிகளில் முழுவதுமாக பெண் அதிகாரிகளைக் கொண்டு வாக்குப்பதிவு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:புதுச்சேரியில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன

Body:புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் துறை சார்பில் வாக்குப்பதிவு காண முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்கள் உள்ளனர் இவர்கள் வாக்களிக்க 970 வாக்குச்சாவடிகளும் 2471 வாக்கு இயந்திரங்களும் ,

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வி வி பேட் 1209 இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதற்கு 2 வாக்கு இயந்திரங்கள் வாக்குச் சாவடியில் வைக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது

இதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 27 வாக்குச்சாவடிகளும் மொத்தம் 29 ஆயிரத்து 320 வாக்காளர்கள் உள்ளனர் எட்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் 6 மணி வரை புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களுடன் 3700 போலீசார் இந்த பணியில் உள்ளனர் புதுச்சேரியில் 222 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை 25 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை கண்டறியப்பட்டுள்ளது அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் இம்முறை முதல்முறையாக ஏழு வாக்குச்சாவடியில் முழுவதும் பெண் அதிகாரிகள் கொண்டு வாக்குப்பதிவு நடக்க உள்ளது இந்நிலையில் இன்று , நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களுக்கு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்கு இயந்திரங்கள பலத்த போலீஸ் பாதுகாப்பாக அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது

Conclusion:புதுச்சேரியில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.