கரோனா வைரஸ் நோயால் பல மாநிலங்கள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. இதனிடையே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மாநில அரசுகள் திட்டமிட்டுவருகின்றன. பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த மாநில அரசுகள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தகுந்த ஆலோசனைக்குப் பிறகு சர்வதேச தரத்தின்படி சட்டங்களை இயற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்திரிய ஜனதா தளம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இப்போராடத்தின்போது தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
கடந்த வாரம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இந்த எட்டு கட்சிகள் ஒன்றிணைந்து கடிதம் எழுதின. அக்கடிதத்தில், வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்னை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, சரத் யாதவ், மனோஜ் ஜா உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் குரல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: இயல்பாகிப் போன புதிய சூழல்...