உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராஜாஜி புலிகள் காப்பகத்தில் நான்கு வெவ்வேறு பகுதிகளில் புலிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க பொருத்தப்பட்டிருந்த எட்டு கேமராக்கள் திருடு போயுள்ளன. இவை அனைத்தும் ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமல் சென்றுள்ளன. இதற்கு முன்னதாக, கார்பெட் டைகர் ரிசர்வ் (Corbett Tiger Reserve) பகுதியிலிருந்த இரண்டு கேமராக்கள் காணாமல் போனது.
இதுதொடர்பாக பேசிய ராஜாஜி புலிகள் காப்பாளர் கோமல் சிங், "எட்டு கேமராக்களும் பெரிவாடா, ராம்கர் வீச்சின் சுஸ்வா, மோதிச்சூர் வீச்சின் கங்கா மஜாரா, ஹரித்வார் ஆகியப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்தன. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அருகிலிருக்கும் பகுதியைச் சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!