மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்மீது பொது மக்கள் தங்கள் கருத்துகளை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டை கொள்ளையடிப்பதுதான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவின் தெளிவான நோக்கம்.
நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் மோடியின் சூட் பூட் நண்பர்களுக்காக மட்டுமே பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. சுற்றுச்சூழல் அழிவு, வளங்கள் திருட்டு ஆகியவற்றைத் தடுக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
EIA2020 ड्राफ़्ट का मक़सद साफ़ है - #LootOfTheNation
— Rahul Gandhi (@RahulGandhi) August 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
यह एक और ख़ौफ़नाक उदाहरण है कि भाजपा सरकार देश के संसाधन लूटने वाले चुनिंदा सूट-बूट के ‘मित्रों’ के लिए क्या-क्या करती आ रही है।
EIA 2020 draft must be withdrawn to stop #LootOfTheNation and environmental destruction.
">EIA2020 ड्राफ़्ट का मक़सद साफ़ है - #LootOfTheNation
— Rahul Gandhi (@RahulGandhi) August 10, 2020
यह एक और ख़ौफ़नाक उदाहरण है कि भाजपा सरकार देश के संसाधन लूटने वाले चुनिंदा सूट-बूट के ‘मित्रों’ के लिए क्या-क्या करती आ रही है।
EIA 2020 draft must be withdrawn to stop #LootOfTheNation and environmental destruction.EIA2020 ड्राफ़्ट का मक़सद साफ़ है - #LootOfTheNation
— Rahul Gandhi (@RahulGandhi) August 10, 2020
यह एक और ख़ौफ़नाक उदाहरण है कि भाजपा सरकार देश के संसाधन लूटने वाले चुनिंदा सूट-बूट के ‘मित्रों’ के लिए क्या-क्या करती आ रही है।
EIA 2020 draft must be withdrawn to stop #LootOfTheNation and environmental destruction.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நாடு முழுவதும் பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வரைவு நாட்டிலுள்ள வளங்களை பெருநிறுவனங்கள் அபகரிக்கவும் அழிக்கவும் வழிவகுப்பதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும், சூழலியல் ஆர்வலர்கள் இவ்வரைவுக்கு எதிரான கருத்துகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இ-மெயிலுக்கு பொது மக்கள் அனுப்பவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிடக்கோரி ஏராளமான கருத்துகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை தமிழ் மொழியில் வெளியிட வாய்ப்புள்ளதா? - உயர் நீதிமன்றம் கேள்வி!