உலக மகளிர் தினத்தையொட்டி ஹைதராபாத்தில் இன்று இன்டர்நேஷனல் வுமன் நெட்வர்க் (ஐவின்) என்ற தொண்டு நிறுவனத்தின் திறப்புவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், "பெண் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புவது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். படித்த பெண்கள்தான் திறமை வாய்ந்தவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் திகழ்வர். மேலும் அவர்களே சிறந்த பெற்றோராகவும் இருப்பர்.
இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கு என்றுமே ஒரு மதிக்கத்தக்க இடமுண்டு. முதலில் கல்வி, பின் செல்வம், கடைசியாகத்தான் அமைதி. காயத்திரி மந்திரம் பாடும்போதும், கீதை படிக்கும் போதும், பெண்களுடன் நாம் என்றுமே உள்ளோம். இது பெண்களின் உலகம்" என்றார்.
இதையும் படிங்க : 'பெறப்போகும் வெற்றி மலர்களைக் காணிக்கையாக்குவோம்' - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!