ராஜஸ்தானில் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அரசியல் குழப்பம் நிலவிவருகிறது. அங்கு முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 சட்டப்பேரவை உறுப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அவர்களைத் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் சபாநாயகர் சி.பி. ஜோஷி களமிறங்கியுள்ளார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி ஆட்சியைத் தக்கவைக்கும் நடவடிக்கையில் அசோக் கெலாட் தயாராகிவருகிறார். இந்த நெருக்கடியான சூழலில் முதலமைச்சரின் சகோதரர் அக்ரசன் கெலாட்டுக்கு புதிய சோதனை வந்துள்ளது. 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை உர ஏற்றுமதியில் ஊழல் செய்த புகாரில் அக்ரசன் கெலாட் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இது, மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் என சோதனை குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மட்டுமில்லாமல், மேற்கு வங்கம், குஜராத், டெல்லி என நாடு முழுவதும் இந்தப் புகார் தொடர்பாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாடும் ராஜஸ்தான் சபாநாயகர்