சூரியனில் எத்தனை சதவீதம் நிலவினால் மறைக்கப்படுகிறதோ, அதை பொறுத்து சூரிய கிரகணங்கள் அழைக்கப்படும். அவை பொதுவாக மூன்று கிரகணங்களாக பார்க்கப்படும். அவை பகுதி சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்காமல், சூரிய ஒளியின் அளவை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தலாம். இது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.