ETV Bharat / bharat

விரைவில் தேர்தல் சீர்திருத்தம் - சட்ட அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை

author img

By

Published : Feb 19, 2020, 12:45 PM IST

டெல்லி: தேர்தல் நடைமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து சட்ட அமைச்சகத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ஆலோசனையில் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ECI
ECI

நீண்ட காலமாக மேற்கொள்ள வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது.

இந்தக் கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்தச் சீர்திருத்தங்கள் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ளதாகவும், முக்கிய கோரிக்கைகள் விரைவில் நடைமுறைக்குக் கொண்டவரப்படுமெனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், வயதானவர்கள், மாற்றுத்திறானாளிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் தபால் வாக்களிப்பு முறையை நடைமுறைபடுத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையர் நன்றி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லாவசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய மூத்த அலுவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சட்ட அமைச்சகம் சார்பில் துறை செயலர் நாராயன் ராஜூ, கூடுதல் செயலர் ரிடா வஷிஷ்த் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ள கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்துடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உத்வேகம் அளிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.