மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 4 கட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த, போபால் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், ’பாபர் மசூதியை இடித்ததற்கு பெருமை கொள்கிறேன்’ என கூறியிருந்தார்.
இதனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறயதற்காக பிரக்யா சிங் தாகூர், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள 72 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.