ஒரு கட்சி தேசிய கட்சியாக அறிவிக்கப்படவேண்டுமெனில் அவற்றிற்கென சில விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதாவது, ஒரு கட்சி நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் நடைபெறும் மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தல்களில் தேர்தல்களில் பங்கேற்று குறைந்தது 6 சதவீத வாக்குகளை பெறவேண்டும். மக்களவையில் குறைந்தபட்சம் 4 உறுப்பினர்களை கொண்டிருக்கவேண்டும் என்பதே அந்த விதி.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களது தேசிய கட்சி அந்தஸ்தை நிலைநிறுத்தும் அளவிற்கு வெற்றி வாய்ப்பினை பெறவில்லை. எனவே, இக்கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த தேசிய கட்சி அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பிய இந்திய தேர்தல் ஆணையம், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அகஸ்ட் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.