ETV Bharat / bharat

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: ஊர்வலத்தில் கரோனா விதிமுறையை மீறிய அமைச்சருக்கு நோட்டீஸ்

ஜெய்ப்பூர்: தேர்தல் பரப்புரையில் கரோனா விதிமுறைகளை மீறிய ராஜஸ்தான் அமைச்சருக்கு, மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ‌.

oadroadrad
oadroad
author img

By

Published : Oct 29, 2020, 3:54 PM IST

ராஜஸ்தானில் கோட்டா பகுதியில் வீட்டுவசதி துறை அமைச்சர் சாந்தி தரிவாலு தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. ஆனால், அப்போது கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து நமது ஈடிவி பாரத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஈடிவி பாரத் செய்தியை அறிந்த தலைமை தேர்தல் அதிகாரி ஷியாம் சிங் ராஜ்புரோஹித், இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரான உஜ்வால் ரத்தோருக்கு கடிதம் அனுப்பினார். இவ்விவகாரம் குறித்து பாஜக கட்சியை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி உஜ்வால் ரத்தோர் கூறுகையில், " தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.