நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாடல்களுடன் உங்கள் தினத்தைத் தொடங்குங்கள். வீணை வித்வான் எமானி சங்கரா சாஸ்திரியின் ஸ்வகதம்" என்று பதிவிட்டு அந்தப் பாடலின் தொடுப்பையும் (லிங்க்) கொடுத்துள்ளார்.
அதேபோல மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கேரட் சாப்பிட்டால் விட்டமின் ஏ, பொட்டாசியம் கிடைக்கும். மேலும், மாசால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் கேரட் நம்மைப் பாதுகாக்கும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: மூச்சு விட முடியாத அளவுக்கு காற்று மாசு - திணறும் தலைநகர்