டெல்லி: ஹரியானாவில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் 4.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதனால் டெல்லி, ஹரியானா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஏற்கனவே, கரோனா தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலநடுக்கமானது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.