இது குறித்து அம்மையத்தின் அலுவலர்கள், "டெல்லி, அதன் வடமேற்கு பகுதிகளில் 2.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டது.
லேசான நிலநடுக்கம் என்பதால் உயிரிழப்புகள், பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 10ஆம் தேதி இதேபோல் டெல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இடுக்கி அணையில் தொடர் நிலநடுக்கம் - புவியியல் துறையினர் ஆய்வு