இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.1 என பதிவாகி இருந்தது.
சம்பா பகுதியில் சரியாக ஐந்து கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நடந்தது. இதனை மக்கள் உணர்ந்தனர். அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. எனினும் யாருக்கும் உயிர் சேதமோ, பிற சேதமோ ஏற்படவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 11 தினங்களில் எட்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், நிலநடுக்கம் நடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.