கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகின் பிரச்னைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான், இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, “புதிய கரோனா வைரஸ் தொற்றுநோய், உலக சுகாதார மேலாண்மை மற்றும் அதன் பின்னர் பொருளாதார மீட்சி பற்றி ஜெய்சங்கர் பேசினார்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “ஜெய்சங்கர், பயண விதிமுறைகள் உள்ளிட்ட பிரச்னைகளில் கவனம் செலுத்தினார்” என்று ட்வீட் தகவல் வழியாக அறிய முடிகிறது.
தொற்றுநோயின் கடுமையான பரவல் மற்றும் உலகளாவிய தலைமையின் பற்றாக்குறை தொடர்பாக அமெரிக்கா -சீனா இடையே பதற்றங்கள் நிலவுகிறது.
இந்நிலையில், இந்தியா தனது அனைத்து முக்கிய நட்பு நாடுகளுடனும் ஒரு காணொலி சந்திப்பை நடத்தியது இதுவே முதல் முறை.
-
Conversation covered pandemic response, global health management, medical cooperation, economic recovery and travel norms. Look forward to continuing this engagement.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Conversation covered pandemic response, global health management, medical cooperation, economic recovery and travel norms. Look forward to continuing this engagement.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 11, 2020Conversation covered pandemic response, global health management, medical cooperation, economic recovery and travel norms. Look forward to continuing this engagement.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 11, 2020
முன்னதாக ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அவரது பிரேசிலிய பிரதிநிதி எர்னஸ்டோ அராஜோ ஆகியோருடன் தொலைபேசி உரையாடலை நடத்தியிருந்தார்.
கரோனா வைரஸை திறம்பட கையாள்வதற்கான வழிகளில் பரவலாக கவனம் செலுத்தினார். இந்தியாவில் கரோனா வைரஸூக்கு 67 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.