கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ஆம் தேதி பிறப்பித்த நாடு தழுவிய முழு ஊரடங்கை, மே 31ஆம் தேதி மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதன் பின் படிப்படியாக மத்திய, மாநில அரசுகள் தளர்வுகள் அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு தடை போடக்கூடாது என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
![புதுச்சேரியில் இ-பாஸ் ரத்து...!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-01-epass-announcement-7205842_23082020110253_2308f_1598160773_160.jpg)
இதனையடுத்து இன்று (ஆக. 23), “புதுச்சேரியிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களிலிருந்து உள்ளே வருவதற்கும் இனி இ-பாஸ் தேவையில்லை” என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுபடி புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!