நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 பயணிகள் ரயிலை, இயக்குவதற்காக தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி அழைப்பு விடுத்தது. ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கலை நோக்கி இட்டுச் செல்லும் இந்த அறிவிப்பின் மூலம், அத்துறையில் தனியார் நிறுவனம் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ரயில்வேயை தனியார்மையமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு புதுச்சேரி ரயில்வே நிலையம் எதிரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் சரவணன், பொருளாளர் பாஸ்கர், இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தனியார்மயமாக்கலை நோக்கி செல்லும் ரயில்வேதுறை!