ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில் 70 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அனைத்தையும் பொய்பிக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கட்சி தொடங்கிய 10ஆவது மாதத்தில் துஷ்யந்த் சவுதாலா தன் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். முன்னாள் பிரதமர் தேவி லாலின் பேரனான இவர், குடும்ப பிரச்னையால் தேசிய லோக் தள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், ஜனநாயக் ஜனதா என்ற கட்சியை தொடங்கினார். நாடு முழுவதும் பாஜகவின் ஆதிக்கம் உள்ள நிலையில், இவரின் கட்சி 10 தொகுதிகளுக்கு மேல் வென்றுள்ளது.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்க துஷ்யந்த் சவுதாலாவை நாடுவதால், அவர் கிங் மேக்கராக மாறியுள்ளார்.