சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆன பிறகும்கூட நாட்டின் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் இறந்த உடல்களை கிராம மக்கள் தோளில் தூக்கி எடுத்துச் சென்றனர்.
சம்பவத்தன்று, தாயும் மகளும் உடல்நலம் குன்றி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களைத் எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வேண்டி தொடர்புகொண்டபோது அவசர ஊர்தி கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்துதான் உடல்களை அந்த கிராம மக்கள் தங்களின் தோள்களில் தாங்கி தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியது. இது மகாராஷ்டிராவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வுக்குள்ளான 5 மாத குழந்தை உயிரிழப்பு